மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ‘புதுமை படைப்புகள்’ உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நாட்டின் வளர்சிக்கு இளைஞர்கள் பெருமை சேர்த்து வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
தேசிய சிறார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடிய அவர், உலகம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளாக பணியாற்றும், தலைசிறந்த இந்திய இளைஞர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் அனுமதிக்கப்படாத துறைகளில், இந்திய பெண் குழந்தைகள் வியக்கத்தக்க வகையில் புதுமைகளை படைத்தும், துணிச்சலைக் காட்டியும் பெருமை சேர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய இளைஞர்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் மாபெரும் பங்காற்றி வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்ட அவர், குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாடுமுழுவதிலுமிருந்து சாதனை படைத்த 29 குழந்தைகள், அவர்களது பெற்றோர் மற்றும் அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், டிஜிட்டல் சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்.
விருதுநகரைச் சேர்ந்த விசாலினி-க்கு, வெள்ளத்தால் பாதிக்கப்படாத குடியிருப்பு கட்டுவது தொடர்பான அவரின் புதிய படைப்புக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதில் ஒரு பதக்கம், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
|