பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 20வது சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய திரைப்படங்கள் பிரிவில் தமிழில் தயாரிக்கப்பட்ட ‘கூழாங்கல்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
இந்த திரைப்பட விழாவில், 70 நாடுகளைச் சேர்ந்த 225 திரைப்படங்கள் இடம்பெற்றன.
பங்களாதேஷ் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. ஹாசன் Mahmood விருதுகளை வழங்கினார்.
பி.எஸ். விநோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம், மதுரை ஊரகப் பகுதியை மையமாக கொண்டதாகும்.