Thursday, May 26, 2022

தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சாதனைகள் படைத்த மகளிரை கொண்டாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு உரிய வாய்ப்பை வழங்க, அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற கொள்கைக்கேற்ப, இன்றைய உலகில் இந்தியப் பெண்கள், பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
- Advertisement -spot_img
Latest news
Related news