Saturday, January 29, 2022

புதுமை கண்டபிடிப்புகளுக்கான தொழில் நிறுவனங்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

புதுமை கண்டபிடிப்புகளுக்கான தொழில் நிறுவனங்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரதமர் திரு நரேந்திரமோடி கூறியுள்ளார்.
ஸ்டார்ட் அப் எனப்படும் புதுமை கண்டுபிடிப்பிடிப்புகளுக்கான தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன், காணொலி காட்சி வாயிலாக இன்று பிரதமர் கலந்துரையாடினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
புதுமை கண்டுபிடிப்புகள், தொழில் முனைவு மற்றும் ஸ்டாட் அப் சூழலியல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இவற்றின் வாயிலாக அதிக அளவிலான இளைஞர்கள் புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அரசு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
2013-14-ஆம் ஆண்டுகளில் நான்காயிரம் காப்புரிமைகள் மட்டுமே அங்கரிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டற்றுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இது பொற்காலமாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
- Advertisement -spot_img
Latest news
Related news