Saturday, January 29, 2022

உலகப் பொதுமறையாம் திருக்குறளை படைத்த திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை படைத்த திருவள்ளுவரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி குடியரசுத் துணைத்தலைவர் திரு வெங்கையாநாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், ஞானியாகவும், தமிழ் புலவராகவும் திகழ்ந்த திருவள்ளுவருக்கு இந்நாளில் மரியாதை செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
காலத்தால் அழிக்க முடியாத திருக்குறளை அனைவரும் படித்து, அதனை பின்பற்ற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திரமோடி விடுத்துள்ள செய்தியில், திருவள்ளுவரின் கோட்பாடுகள் அனைத்து காலங்களுக்கும் நடைமுறைக்கு உகந்ததாக உள்ளன என்று கூறியுள்ளார்.
திருக்குறளின் பன்முகத்தன்மை மற்றும் அதன் கருத்தாழம் எப்போதும் தனித்துவம் பெற்றவையாக உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -spot_img
Latest news
Related news