Tuesday, January 25, 2022

வெளிமாநில தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிமாநில தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத் துறை செயலாளர் திரு சுனில் பரத்வால், மாநில அரசுகளின் உயரதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இரவு நேர ஊரடங்கு மட்டுமே தற்போது விதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டிடப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
எனவே வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மாநில அரசுகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் ஈஷ்ரம் இணையத்தளத்தில் இதுவரை 21 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும், எஞ்சிய தொழிலாளர்கள் விரைந்து பதிவு செய்து கொள்ள மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  மத்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
- Advertisement -spot_img
Latest news
Related news