Saturday, January 29, 2022

மாநிலங்களுக்கு இதுவரை 157 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இதுவரை 157 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களில் தற்போது 15 கோடியே 17 லட்சம் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளது.
இதற்கிடையே, இதுவரை செலுத்தப்பட்ட கோவிட் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை 155 கோடியே 39 லட்சத்தை கடந்துள்ளது.
நேற்று மட்டும் 73 லட்சம்டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 753-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img
Latest news
Related news