A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
10:58AM

வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம்

NSD Logo
வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை முதல் வரும் 11-ம் தேதிவரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

   தொடர்புடைய செய்தி

12543

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5