A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 22, 2021
10:34AM

எல்லைப்பகுதிகளில் இந்தியா – சீனா பரஸ்பரம் தமது படைகளை சுமூகமாக திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

NEWS ON AIR
Pangong ஏரி எல்லைப்பகுதிகளில் இந்தியா சீனப்படைகள் முழுவதுமாக திரும்ப பெற்றதை அடுத்து, மற்ற பகுதிகளிலும் படைகளை சுமூகமாக திரும்ப பெறுவது என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய – சீன ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற 10வது சுற்று பேச்சுவார்த்தை முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன எல்லைக்கு உட்பட்ட moldo  பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ராணுவ அதிகாரிகள் Pangong ஏரி எல்லைப் பகுதிகளில் இருநாடுகளும் பரஸ்பரம் படைகளை திரும்ப பெற்றது குறித்து முழு திருப்தி தெரிவித்தனர்.  இது ஒரு நல்ல துவக்கம் என்றும் இதை அடிப்படையாக வைத்து மற்ற பகுதிகளிலும் படைகளை இருநாடுகளும் திரும்ப பெற்று எல்லைப்பகுதிகளில் அமைதியான சூழல் ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.
மேற்கு பகுதிகளில் தற்போதுள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து இருதரப்பும் விரிவாக விவாதித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இருநாடுகளின் ராணுவ அதிகாரிகளும் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தற்போதுள்ள நிலைமைகளை கட்டுக்குள் வைத்து இருநாடுகளுக்கும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொண்டு, எல்லைப் பகுதிகளில் சகஜநிலை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இதற்கிடையே, சேலத்தில் பிஜேபி இளைஞர் அணி மாநில மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சீனாவுடன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் தற்போது எல்லைப்பிரச்சினையில் ஒரு பகுதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4