A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
9:32PM

தமிழகத்தில் கோவிட்-19 பரவலை தடுக்கும் விதமாக, நாளை மறுநாள் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

NSD Logo
தமிழகத்தில் கோவிட்-19 பரவலை தடுக்கும் விதமாக, நாளை மறுநாள் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இம்மாதம் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களை தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எவ்வித தளர்வுகளும் இன்றி முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு நாளை மறுநாள் முதல் தடை விதிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கிருமி நாசினி பயன்பாடு, முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு
இ-பதிவு முறை தொடரும்.
திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கலாம்.
உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 பேர் வரையிலும், திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரையிலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேர் வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு எட்டு மணி வரை மட்டுமே பொது மக்கள் வழிபாடு அனுமதிக்கப்படும், எனினும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவ மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள்ளாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

   தொடர்புடைய செய்தி

12562

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5